

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை யிட்டபோது, அதில் 450 புதுச் சேரி மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக காட்டூர் விண் நகரைச் சேர்ந்த மதன்குமார்(30), நவல்பட்டு அண்ணாநகர் விக்கி(28), காட்டூர் ராஜவீதி சுகன்(28), எழில்நகர் அருண்குமார்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.