

திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசிகளை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், வட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுரேஷ், ஷாஜகான், அழகர், நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.