சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு  :
Updated on
1 min read

தி.மலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த சின்ன காப்ப லூர் கிராமத்தில் வசித்தவர் தொழிலாளி கருணாகரன்(56). இவர், நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து தனது வீட்டுக்கு நண்பர் சீனுவாசன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்றார். தி.மலை அடுத்த இனாம்காரியந்தல் அருகே சென்றபோது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தை முந்தி சென்றபோது, இரண்டு வாகனங்களும் உரசிக் கொண்டதில் சீனுவாசன் மற்றும் கருணாகரன் ஆகியோர் கீழே விழுந்துள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி கருணாகரன் உயிரிழந்தார். இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in