Published : 10 Jun 2021 03:12 am

Updated : 10 Jun 2021 03:12 am

 

Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

இலவச தடுப்பூசி அறிவிப்பு பிரதமருக்கு முதல்வர் நன்றி :

புதுச்சேரி: இலவசமாக தடுப்பூசி தரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,“நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில், ‘மத்திய அரசே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கும்‘ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நவம்பர் வரை இலவச உணவு பொருட்கள் தருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டு கரோனாவை முழுவதுமாக விரட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x