

விருதுநகர் மாவட்டம் பாவலி சந்திரகிரிபுரம் பகுதியைச் சேர்ந் தவர் நாராயணசாமி(32). திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த இவர், சிறை வளாகத்திலுள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நிலை மோசமானது. இதை யடுத்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.