

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சங் கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில், ஊரடங்கால் திருச்சி மாநகரில் வேலையின்றி வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள பேட்ஜ் உள்ள மோட்டார் வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிக் கடன் தவணையைச் செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.
எப்சி, இன்சூரன்ஸ் எடுக்க 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.