Published : 10 Jun 2021 03:13 am

Updated : 10 Jun 2021 03:13 am

 

Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு :

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 8 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.

மேலும், துறையூர் வட்டத்தில் எரகுடி மற்றும் லால்குடி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், எஸ்.கதிரவன், எம்.பழனியாண்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x