தொண்டு நிறுவனம் சார்பில் - ரூ.50 ஆயிரம் மதிப்பிலான : கரோனா தடுப்பு பொருட்கள் : திருப்பத்தூர் ஆட்சியரிடம் வழங்கல்

ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரோனா தொற்று தடுப்பு பொருட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் வழங்கிய எஸ்ஆர்டிபிஎஸ் இயக்குநர் தமிழரசி.
ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரோனா தொற்று தடுப்பு பொருட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் வழங்கிய எஸ்ஆர்டிபிஎஸ் இயக்குநர் தமிழரசி.
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து கரோனா பரவல் தடுப்புப்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்டிபிஎஸ் குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு தொண்டு நிறுவனம் தமிழக அரசின் இணையதளத்தில் தொற்று பரவல் தடுப்பு பணியில் இணைந்து செயல்பட பதிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சர்ஜிக்கல் முகக்கவசம், எண்95 முகக்கவசம், அரிசி, கிருமிநாசினி, கையுறை உள்ளிட்ட தொற்று தடுப்பு பொருட்களை திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருளிடம், எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் தமிழரசி நேற்று வழங்கினார்.

தொண்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நோய் தடுப்புப்பொருட்கள் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கும், மருத்துவ மனைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in