Published : 09 Jun 2021 03:15 am

Updated : 09 Jun 2021 03:15 am

 

Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் - கடன் தொகையை திரும்பச் செலுத்த நிர்ப்பந்தித்தால் நடவடிக்கை : தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

கோவை

ஊரடங்கு காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர்வெளியிட்ட செய்திக் குறிப்பில்கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் வங்கிகள், நுண் நிதிகடன் வழங்கும் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தொகையை திரும்பச் செலுத்தக் கேட்டு நிர்ப்பந்தம்செய்து வருவதாக புகார்கள் வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. எனவே, அவர்களது கடனுக்கான தவணைத் தொகையை வசூலிக்க நிர்ப்பந்தம் செய்வதை தவிர்த்து கால அவகாசம் வழங்குவதோடு, கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.


கடன் தொகையை வசூல் செய்வதற்காக நிதி நிறுவன பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதால் அவர்கள் மூலம்கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, இதுதொடர்பாக எந்தபுகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும்.

இதையும் மீறி புகார்கள் வந்தால், ஊரடங்கு நடைமுறை களை மீறிய செயலாக கருதப்பட்டு, தொடர்புடைய தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x