Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

செயலி, வாட்ஸ் அப் மூலமாக 2,700 பேருக்கு மருத்துவ ஆலோசனை :

கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில்கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இச்செயலியின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் 24 மணிநேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் GCC Vidmed செயலியின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு காணொலி காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க கூடுதலாக 94983 46510, 94983 46511, 94983 46512 , 94983 46513, 94983 46514 என்ற வாட்ஸ் ஆப் தொலைபேசி எண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் திங்கட்கிழமை(நேற்று முன்தினம்) வரை GCC Vidmed செயலியின் மூலம் 1702 நபர்களும், வாட்ஸ் ஆப் எண்களின் மூலம் 991 நபர்களும் காணொலி காட்சி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுள்ளனர். இவர்களில் கரோனா தொற்று அறிகுறியுடன் இருந்த 105 நபர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x