Published : 09 Jun 2021 03:16 am

Updated : 09 Jun 2021 03:16 am

 

Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

வாடிப்பட்டி அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு :

மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய்கரை பகுதியில் சுமார் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் நிர்வாகி கோபிநாத் கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். கோயிலின் உட்புறம் திருமண மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தின் காவலாளி இராமையன்பட்டியைச் சேர்ந்த திருவேங்கடம் பணியில் இருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 7 பேர் கோயிலின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளனர். அவர்கள் கோயில் பூட்டை உடைத்து ஒரு பகுதியிலிருந்த 3 அடி உயர நடராஜர் சிலை, 1 அடி உயர நடராஜர் சிலை,

நேற்று அதிகாலை கோயிலில் திருட்டு நடந்ததை அறிந்த காவலாளி கோயில் நிர்வாகி கோபிநாத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x