Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை :

2017-18 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப் பிக்கத் தவறியோருக்குப் புதுப்பித்துக்கொள்ள சிறப்புச் சலுகையை அரசு அறிவித் துள்ளது. இச்சலுகையை விரும்பும் பதிவுதாரர்கள் மே 28 முதல் 3 மாதத்துக்குள் அதாவது ஆக.27-ம் தேதிக்குள் இணையவழியாக தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ள லாம். இணையம் மூலம் புதுப்பிக்கும்போது, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை யின் (http://tnvelaivaaippu.gov.in/) என்ற இணைய முகவரியைப் பயன்படுத்திப் புதுப்பிக்கலாம் என ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x