Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

பள்ளிகளின் சார்பில் நடத்தப்படும் இணைய வழி வகுப்புகளின்போது - தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை : மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களி லுள்ள பள்ளிகளின் சார்பில் நடத் தப்படும் இணைய வழி வகுப்பு களின்போது தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் கார ணமாக பள்ளி மாணவ, மாணவி களுக்கு இணைய வழியில் வகுப் புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சமயத்தில் சில பள்ளி களின் ஆசிரியர்கள், மாணவி களிடம் தவறாக நடந்து கொண்ட தாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாது காப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதி யான தொந்தரவுகளைத் தவிர்ப் பதற்காகவும் திருச்சி, புதுக் கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட் டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளி களின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோ சனை நடத்தினார். இதில் 255 பள் ளிகளின் முதல்வர்கள், தலைமை யாசிரியர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஐ.ஜி பாலகிருஷ் ணன் பேசியது: தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, அனைத்து இணையவழி வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத் தினரால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு, அவற்றை பாதுகாப் பாக பராமரிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த 2 பேர் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

பாலியல் தொந்தரவு தொடர் பான புகார்களை அளிக்கும் வகையில் காவல்துறையின் உதவி எண்களை மாணவ, மாணவி களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக் கப்படும்.

மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் பிரிவின் காவல் அதிகாரிகள், தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இணைய வழியாக பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் 9 மாவட்டங் களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர் நியமனம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்), கரூர் மாவட்டத்தினர் 8300054716 (சிவசங்கரி), பெரம்பலூர் மாவட்டத்தினர் 9498106582 (அஜீம்), அரியலூர் மாவட்டத்தினர் 9498157522 (சிந்துநதி), தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9498107760 (கலைவாணி), திருவாரூர் மாவட்டத்தினர் 9498162853 (பிரியா), நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 9498110509 (ரேவதி), மயிலாடுதுறை மாவட்டத்தினர் 9498157810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x