Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளுக்கு - தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் : திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஆக்சிஜன் தயாரிக்கும் பணிக ளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வேண்கோள் விடுத் துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் உதவுதல் தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சு.சிவராசு பேசியது: அரசு நிர்வாகம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் இணையதள முகவரியில் https://ucc.uhcitp.in/ngoregistration தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஒருமுறை மட்டும் பதிவு மேற்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை செய்திருந்தால் அவற்றை நீக்கம் செய்ய வேண் டும்.

ஆக்சிஜன் தயாரிக்கும் பணி களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். கரோனா காலத்தில் வறுமையில் வாடுவோர், முதியோர், ஆதரவற்றோர், வேலைவாய்ப்பற்றோர் உள்ளிட்டவர்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கி உதவ வேண்டும்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி உதவிடும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங் கப்படும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ள பொருட்களை ஒருங்கிணைப்புக் குழு அலுவலர் தெரிவிக்கும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் பொருட்கள் ஒப்படைப்பு செய்த விவரத்தையும், பொருட்களை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் பொருட்களை பெற்றுக் கொண்ட விவரத்தையும் ஒருங்கிணைப்புக் குழு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் இணையத்தில் பொருட்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவரம் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையத்தில் பதிவு மேற்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 0431-2418995, 2461240, 2461245, 2461243 மற்றும் 2461263 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிஷா மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x