

மணப்பாறை வட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று ஆய்வு செய்தார்.
மணப்பாறை சின்னக்கடை வீதி, கண்ணுடையான்பட்டி ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள் ளவர்களை ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும், நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வகைப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் முன்னேற் பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரேவதி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.