நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு :

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு :
Updated on
1 min read

முசிறி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பி.நளினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முசிறி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைக்கும் திட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் இலக்குகள் ஒதுக்கப்பட்டு ரூ.13.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அரசால் அங்கீகரிக் கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 100 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீ தமும் அரசு மானியம் வழங்கப் படும்.

தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருவதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு சாகுபடி பரப்பை அதிகரிக்க நுண்ணீர் பாசனம் அமைத்துப் பயன்பெறலாம்.

நுண்ணீர் பாசனம் மானியத்தில் பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகள் சான்று மற்றும் விவசாயியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் முசிறி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 ஹெக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in