Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

‘கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் : கரோனா விதிகளை மறக்க கூடாது’ :

காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை மறக்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உட்பட கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில், காலை முதல் மாலை வரை பழங்கள்,மளிகை, காய்கறி கடைகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து, கோவையில் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டு கிடந்த காய்கறி, பழங்கள் மொத்த விற்பனை மையங்கள், மளிகை பொருட்களுக்கான வர்த்தக வீதிகளில் மக்கள் திரண்டனர். உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம், தியாகி குமரன் மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி உள்ளிட்ட வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

புறநகர் பகுதிகளுக்கு பொருட்களை வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகரில் கரோனா தொற்றின் பாதிப்பு நன்றாக குறைந்து வருகிறது.அரசு அனுமதித்துவிட்டது என்பதற்காக மக்கள் தங்களது இஷ்டம் போலவெளியில் சுற்றலாம் என்றில்லை. கடைகள், சந்தைகளுக்கு எங்குசென்றாலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தொற்று பரவலை தொடர்ந்து குறைக்க முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x