

கடலூர்: கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூஸ்னிட் கட்சியின் கடலூர் நகர மைய கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்க்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், நகர செயலாளர் அமர்நாத், நகர குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, பக்கிரான், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டத்தில் தனியார் கரோனா தொற்றும் மற்றும் பல்வகை நோய்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை அரசு தீர்மானித்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வரும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 10-ம் தேதி கடலூர் ஜவான் பவன் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.