புதுச்சேரியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கரோனா தொற்று - 53 நாட்களுக்குப் பிறகு 500க்கு கீழ் குறைந்தது :

புதுச்சேரியில் ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில், பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ‘சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்’ என எத்தனை முறை சொன்னாலும் மக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. புதுச்சேரி பாரதி வீதி குபேர் அங்காடியில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி பொருட்கள் வாங்க நேற்று முற்பகலில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி இது. படம்: எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு 53 நாட்களுக்குப் பிறகு 500க்கு கீழ் குறைந்து 482 ஆகியுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றுஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் 15-ம் தேதி 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து தொற்றின் பாதிப்பு 500ல் தொடங்கி 2 ஆயிரத்தை தாண்டியது. நோய் பரவலில் அசாதாரணமான நிலை உருவானது.

இந்நிலையில் கரோனா தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 53 நாட்களுக்குப் பிறகு நேற்று 500க்கு கீழ் குறைந்து 482 ஆனது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று புதிதாக 7,731 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 400, காரைக்கால் – 53, ஏனாம் – 13, மாகே – 16பேர் என மொத்தம் 482 (6.23 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 6 பேர்,காரைக்காலில் 3 பேர், ஏனாமில்ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். இதில் 30 வயது ஆணும் ஒருவர்.

உயிரிழப்புகள் குறையவில்லை

புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் இரட்டை இலக்கத்திலேயே உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி நேற்று வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்றால் 102 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைச் சேர்த்து புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,638 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஜிப்மரில் 423 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 284 பேரும், கோவிட் கேர் சென்டரில் 252 பேரும்சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 6,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 7,546 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,196 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

91.62 சதவீதம் குணமடைந்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in