ஈரோடு, நாமக்கல் மாவட்ட புதிய எஸ்பி-க்கள் பொறுப்பேற்பு :

சசிமோகன்
சசிமோகன்
Updated on
1 min read

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் காவலர்களின் செயல்பாடு இருக்கும், என ஈரோடு புதிய எஸ்பி சசிமோகன் தெரிவித்தார்.

ஈரோடு எஸ்பியாக இருந்த தங்கதுரை மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த சசிமோகன் ஈரோடு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, சென்னையில் பணிபுரிந்துள்ளார். ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சசிமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா தடுப்பு பணியை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுவோம். பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு (9488010684) தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம். புகாரில் உண்மைத் தன்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் காவலர்கள் செயல்படுவார்கள், என்றார்.

நாமக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in