Regional01
போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் :
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு முகக்கவசம், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வழங்கினார். அனைத்து உட்கோட்ட காவல் துறையினருக்கும் இவை வழங்கப்பட்டன. வள்ளியூர் உட்கோட்ட காவலர்களுக்கு வழங்க, உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா பெற்றுக்கொண்டார்.
