

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் எஸ்.ஜெய்கணேஷ், துணைச் செயலாளர் எஸ். அசோக்ராஜ் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
கரோனா வைரஸ் தொற்று 2-வதுஅலையில் மரணமடைந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மேலும்,கரோனாவால் டாஸ்மாக் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி திட்டத்தை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்ட விதிகளை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.