

சேத்தியாத்தோப்பு அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸார், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், கள்ளச்சாராய ஒழிப்பு தனிப்படை உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வன், மாணிக்கராஜா மற்றும் போலீஸார் அள்ளூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுடுகாடு அருகே பம்பு செட் கால்வாய் ஓரம் சாராயம் விற்ற தவக்களை (எ) வேல்முருகன்(38), கலியபெருமாள் மகன் சேகர்(57) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 லிட்டர் சாராயம் மற்றும் ஊரல் போட பயன்படுத்தும் 2 பெரிய கேன்களையும் பறிமுதல் செய்தனர்.