Published : 07 Jun 2021 03:13 am

Updated : 07 Jun 2021 03:13 am

 

Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

மின் வேலியில் சிக்கி கோயில் காளை உயிரிழப்பு: தந்தை, மகன் கைது :

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு அருகிலுள்ள பன்னிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வீரையா. இவர் தனது வயலில் பருத்தி பயிரிட்டுள்ளார். இதைப் பாதுகாக்கும் நோக்கில் வயலைச் சுற்றிலும் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் அருகிலுள்ள பெரும்பாலபட்டி முத்தாலம்மன் கோயில் காளை கடந்த 4-ம் தேதி காணாமல் போனது. அதற்கு அடுத்த நாள் வீரையாவின் வயலில் இருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து காளை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக பெரும்பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வீரையா (39), அவரது தந்தை கருப்பையா (60) ஆகியோரை கீழவளவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x