

கரோனா தடுப்பூசி மருந்து இருப்பு குறைவாக இருந்த தால், ஈரோடு நகரில் நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட வில்லை. இதனால் ஆர்வ முடன் வந்த மக்கள் ஏமாற்ற மடைந்தனர்.
ஈரோடு நகரில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 100 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயது முதல்45 வயது வரையிலானவர் களுக்கு ஒரு நாளும், 45 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு ஒரு நாள் என பிரித்து ஊசி போடப்படுகிறது. மேலும்,கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி எப்போது போடப்படுகிறது என்ற விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் முன்பு எழுதிப் போடப்படுகிறது.
ஆனால், இந்த அறிவிப்பு களைப் பின்பற்றாமல், கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். தினமும் டோக்கன் பெற்றுள்ள 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் நிலையில், 500 பேர் வரை குவிந்து சுகாதாரத்துறை அலுவலர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால், தடுப்பூசி மையங் களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப் பட்டது. ஏற்கெனவே, 18 முதல் 45 வயது வரையி லானவர்களுக்கான தடுப்பூசி இருப்பு இல்லாத நிலை இருந்தது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 9 ஆயிரம் தடுப்பூசிகள் இருந்த நிலையில் அவை வெள்ளி, சனி ஆகிய நாட்களில் போடப் பட்டது.நேற்று மருந்து கையிருப்பில் குறைவாக இருந்ததால் ஈரோடு நகரில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படவில்லை.
இதனால் நேற்று தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மருந்து வந்தவுடன் தடுப்பூசி போடப்படும் விவரம் அறி விக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.