

ஈரோட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக் கையை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 5-ம் தேதி வரை மாவட்டத்தில் 7 லட்சத்து 24 ஆயிரத்து 475 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 லட்சத்து 42 ஆயிரத்து 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளில் 1382 பேர் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், 300 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா சிகிச்சையளிக்கும் 48 தனியார் மருத்துவமனைகளில் 570 படுக்கைகளும், கரோனா சிறப்பு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2800 படுக்கைகளும் காலியாக உள்ளன.
சுகாதாரத்துறை அறிவிப்பின் படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1694 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2078 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 492 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.