Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருமயத்தில் 192 மில்லி மீட்டர் மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. மாவட் டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான ஒருநாளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருமயம் 192, புதுக்கோட்டை 48, அரிமளம் 40, ஆவுடையார்கோவில் 34, அன்னவாசல் 30, கீரனூர் 28, குடுமியான்மலை 25, கீழாநிலை 24, இலுப்பூர் 20, மழையூர் 17, விராலிமலை 13, உடையாளிப்பட்டி 11, பொன்னமராவதி 9, பெருங் களூர் 6, ஆலங்குடி 5, காரை யூர், ஆதனக்கோட்டை தலா 2.
திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்): நவலூர் குட்டப்பட்டு 65.4, தாத்தையங்கார்பேட்டை 43, லால்குடி 42.4, துவாக்குடி 39.3, பொன்மலை 39, திருச்சி நகரம் 33, சமயபுரம் 28.2, திருச்சி விமான நிலையம் 27.8, தென்பறநாடு 26, திருச்சி ஜங்ஷன், தேவிமங்கலம் தலா 20, துறையூர் 16, கல்லக்குடி 15.2, நந்தியாறு தலைப்பு 14, பொன்னணி ஆறு அணை 13.2, வாத்தலை அணைக்கட்டு 12.6, கொப்பம்பட்டி 10, புள்ளம்பாடி 7.6, புலிவலம் 7, மணப்பாறை 5.4, மருங்காபுரி 3.2, கோவில்பட்டி 2.2.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருமானூர் 36.4, ஜெயங்கொண்டம் 26, செந்துறை 21, அரியலூர் 6.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): லப்பைக்குடிகாடு 90, எறையூர் 55, வேப்பந்தட்டை 39, புதுவேட்டக்குடி 28, வி.களத்தூர் 27, பெரம்பலூர் 22, அகரம் சீகூர் 20, கிருஷ்ணாபுரம் 18, தழுதாளை 16, செட்டிக்குளம் 11, பாடாலூர் 5.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT