தென்காசி மாவட்டம் வடகரையில் - கரோனா உதவி மையம் திறப்பு :

தென்காசி மாவட்டம் வடகரையில் -  கரோனா உதவி மையம் திறப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் வடகரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கரோனா பேரிடர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. வடகரை நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற விழாவில், உதவி மையத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி ஜின்னா தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் பாசித், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சேக் சிந்தா மதார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவான் ஒலி, மாவட்ட பொருளாளர் முகம்மது நயினார் உட்பட பலர் கலந்துகொண்டனர். சுகாதார ஆய்வாளர் கார்த்திக் விழிப்புணர்வு உரையாற்றினார். ஆம்புலன்ஸ், கபசுர குடிநீர், ரத்ததானம், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட தேவைகளுக்கு 8220692262, 9003802571 ,7538877476, 9361678707 என்ற செல்போன்எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in