சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறிதல் முகாம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதியில்  இன்று காய்ச்சல் கண்டறிதல் முகாம்  :  மாநகராட்சி ஆணையர் தகவல்
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி பகுதியில் தொற்று கண்டறியப்பட்ட பகுதியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சியில் கரோனாதொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனார். நேற்று 26 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3,385 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை உத்தரப்பன் காடு, நாராயண நகர் 3-வது குறுக்கு தெரு, லட்சுமி தெரு பகுதிகளிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பெருமாள் கோயில் மேடு, வித்யா நகர், சிவதாபுரம் பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை ராஜாஜி தெரு. கென்னடி நகர், தென்கிழக்கு லேவுட், தாசில்தார் காலனி, ஜெயில் பின்புறம், சின்னத்திருப்பதி, அண்ணாநகர், தியாகி அருணாச்சலம் தெரு. மார்க்கெட் தெரு, எஸ்.எம்.சி காலனி, புதுதிருச்சி கிளை ரோடு, சஞ்சீவிராயன் பேட்டை பள்ளி, மூனாங்கரடு, சந்தப்பேட்டை மெயின்ரோடு, ராமசாமி நகர், நெய்மண்டிதெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும். இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in