

வேலைவாய்ப்பு பதிவை புதிப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக் கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அரசு அறிவித்துள்ளது.
இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் கடந்த 28-ம் தேதி முதல் வரும் 3 மாதங்களுக்குள் (27.08.2021-க்குள்) http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாதவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.