Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

கரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க புதுக்கோட்டையில் - 54,000 பேருக்கு மனநல ஆலோசனை :

கார்த்திக் தெய்வநாயகம்

புதுக்கோட்டை

கரோனா பரவலால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க புதுக்கோட்டையில் உள்ள அரசு மனநல ஆலோசனை மையத்தில் 54,000 பேருக்கும் மேல் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவி வருவதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப் படாதவர்கள் என அனைத்து தரப் பினரும் ஒரு வகையில் மன அழுத் தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்காக புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு மனநல ஆலோசனை மையத்தில் தொலைபேசி வழி சிறப்பு ஆலோசனை வசதி கடந்த ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியா ளர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

மாநிலத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகை யில் இதுவரை 54,000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியது: இதுபோன்ற பேரிடர் காலங்களில் மக்கள் நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது, வாழ் வாதாரத்தை இழப்பது போன்ற சூழல் ஏற்படுவதால் பெரும் பாலானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த 2018-ல் கஜா புயல் எனும் பேரிடரில் சிக்கித் தவித்தோருக்கு நேரிலும், தொலைபேசி மூலமும் இலவச மனநல ஆலோசனை வழங்கப் பட்டது. இந்த திட்டமும் முதலில் புதுக்கோட்டையில் தான் தொடங் கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கரோனா பரவல் தொடங்கியதும் தமிழகத் தில் அரசு அனுமதியோடு முதன் முதலாக புதுக்கோட்டையில் 9486067686, 9494121297 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொலைபேசி வழி மனநல ஆலோ சனை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பிரச்சினை களுக்கு மருத்துவர்கள், பணி யாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இதுவரை, 54,000 பேருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கரோனா தொற்று அச்சம், குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருப்பது, பொருளா தார நெருக்கடி போன்ற காரணங் களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

தேவைப்படுவோருக்கு நேரில் சென்றும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் ஆலோசனை கூறப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா அறிகுறி இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல தயக்கம், தடுப்பூசி போட் டுக் கொள்ள தயக்கம் குறித்தும் அதிகமான அழைப்புகள் வருகின் றன. இவற்றை தாமதமின்றி செய்ய வேண்டும் என அவர் களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். முன்களப் பணியாளர்களும் இந்த ஆலோசனையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x