

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் நேற்று காலை நிலவரப்படி 65 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட் டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 1, சேர்வலாறு- 2, பாளையங்கோட்டை- 18, திருநெல்வேலி- 30.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 134.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,067 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. அணையிலிருந்து 1,292 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 88.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 185 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிரு ந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 140.91 அடி, வடக்கு பச்சையாறு- 40.65 அடி, நம்பியாறு- 12.43 அடி, கொடுமுடியாறு- 28 அடி.
தென்காசி
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கோடை காலத்தில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் விழுகிறது.