ஈரோட்டில் 1619 பேருக்கு கரோனா தொற்று 1616 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் :

ஈரோட்டில் 1619 பேருக்கு கரோனா தொற்று  1616 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் :
Updated on
1 min read

ஈரோட்டில் நேற்று 1619பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1616 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருந்துறை, ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கொடுமுடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைகளில் தற்போது 1388 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 303 படுக்கைகள் காலியாக உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 48 தனியார் மருத்துவமனைகளில், 1780 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனைகளில் 460 படுக்கைகள் காலியாக உள்ளன.

கரோனா பரவல் அதிகம் உள்ளதால், மாவட்டத்தில் நகரப்பகுதியில் 27 இடங்களும், புறநகர் பகுதியில் 129 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளன. 11 ஆயிரத்து 35 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி வரை 7 லட்சத்து 7839 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரோட்டில் நேற்று 1619 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1616 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது 16 ஆயிரத்து 78 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 719 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலத்தில் 1,187 பேருக்கு தொற்று

இதில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 100 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 772 நபர்கள் குணமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in