கடலூர் மாவட்டத்தில் - சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச உழவு பணிகள் :

கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை கிராமத்தில் சிறு,குறு விவசாயிகளின் நிலங்களில் இலவச உழவு பணி நடைபெற்றது.
கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை கிராமத்தில் சிறு,குறு விவசாயிகளின் நிலங்களில் இலவச உழவு பணி நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக அரசு வேளாண்-உழவர்நலத்துறையும் மற்றும் தனியார்நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவச பண்ணை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி கோடை உழவு மற்றும் இதர வேளாண்மை பணிகள் செயல்படுத்துகிறது. இந்நிலையில் கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் நான்கு விவசாயிகளின் நிலங்களில் இலவச உழவு பணிகள் மேற்கொள்ளப்படுவதை நேற்று கடலூர் வேளாண் இணை இயக்குநர் பாலசுப்பரமணியன், கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கடலூர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்களில் இதுவரை 512 விவசாயிகள் விண்ணப்பம் செய்து 1105.6 ஏக்கர் பரப்பளவில் இலவச உழவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகள் இலவச சேவையை பெறுவதற்கு 1800-4200-100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 8610482371 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உழவன் செயலில் வேளாண் இயந்திரங்கள் வாடகை என்ற பகுதியில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in