

திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய காவல்துறை சரக டி.ஐ.ஜி.,யாக எம்.எஸ்.முத்துச்சாமி பணிபுரிந்து வந்தார். இவர் கோயம்புத்தூர் டி.ஐ.ஜி., யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து டி.ஐ.ஜி.,யாக பி.விஜயகுமாரி திண்டுக்கல் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர், சென்னை கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. யாக சென்னையில் பணிபுரிந்தார். 1997-ம் ஆண்டு டி.எஸ்.பி.யாக சென்னையில் பணியில் சேர்ந்தார். இதன்பின் 2006-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக பணிபுரிந்தார். 2018-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.