ஊரடங்கால் 20 ஆயிரம் ஜேசிபி இயந்திரங்கள் முடக்கம் : தவணை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டுகோள்

ஜேசிபி இயந்திரங்கள். (கோப்பு படம்)
ஜேசிபி இயந்திரங்கள். (கோப்பு படம்)
Updated on
1 min read

கரோனா முழு ஊரடங்கால் தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஜேசிபி இயந்திரங்கள் முடங்கி உள்ளன.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வந்தன. இந்த இயந்திரங்களை, அதன் உரிமையாளர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் கடன் பெற்று வாங்கி உள்ளனர். அவற்றுக்கு மாதம்தோறும் தவணைத் தொகை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தளர்வுகளற்ற கரோனா ஊரடங்கால், ஜேசிபி இயந்திரங்கள் இயங்காமல் முடங்கி உள்ளன. இதனால் உரிமை யாளர்களால் தவணைத்தொகை செலுத்த முடியவில்லை. பலரது இயந்திரங்களை தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்தோர் எடுத்துச் செல்லப் போவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து தென்மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் முன்னேற்ற நலச் சங்க மாநிலத் தலைவர் தங்கப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் தர்மர், சிவகங்கை மாவட்டத் தலைவர் முத்துக்குமரேசன் உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது:

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் நிதி நிறுவனங் கள், வங்கிகள் தவணைத் தொகை கட்ட தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதனால் தவணை செலுத்து வதை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். 6 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். சாலைவரி, காப்பீடு தொகை செலுத்துவதையும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in