

புதுக்கோட்டை மச்சுவாடியில் போதை ஊசி விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரம ணியன் மகன் விவேக்(22), குமார் மகன் சின்னதுரை(26) ஆகியோரை கணேஷ்நகர் போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து போதை ஊசி, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில், தலை மறைவான சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியை போலீஸார் தேடி வருகின்றனர்.