

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்புச் சங்கம், அனைத்து தரைக் கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், சுமைப் பணி தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவை சார்பில் நேற்று இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் அடையாளமாக தில்லைநகர் பகுதியில் உள்ள மகஇக அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புஜதொமு மாவட்டத் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜா, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மருத்துவமனை மற்றும் அவசர தேவைக்கு சவாரி சென்று திரும்பும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதை காவல் துறையினர் கைவிட வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் மற்றும் வங்கிகள் கடன் தவணைகளை வசூலிக் காமல் தள்ளிவைக்க வேண்டும். சிறு தொழில் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.