Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் : மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மனு

கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண் டும் என வலியுறுத்தி திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினர்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கி ரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை ஆகியோர் நேற்று அளித்த மனு:

18 வயதுக்கு அதிகமான அனை வருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக போடும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசிகளை இலவச மாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு குடியரசுத் தலை வர் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதேபோல, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விடம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி அளித்த கோரிக்கை மனு:

அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்க வேண் டும். மாநில அரசு பல்வேறு நிதிச் சுமைகளை சமாளிக்க வேண்டி இருப்பதால், மாநில அரசுக்கு இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி போதிய கையிருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கடிதத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல ஆவன செய்ய வேண்டும் என தெரி வித்துள்ளார். நகரத் தலைவர்கள் பெரியசாமி, ஸ்டீபன்பாபு உள் ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனு:

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதைத் தடுக்கும் வகையில் போதியளவு தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே, நாள்தோறும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டமிடல் இருக்க வேண்டும். இதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் விஜயனிடம் தஞ் சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில் அக்கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இவ் விரு நிகழ்வுகளிலும் காங்கி ரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ராஜாதம்பி, மாவட்ட நிர்வாகிகள் ஜேம்ஸ், பழனியப்பன், யேசு, அய்யப்பன், சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x