

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் பீட் பகுதியில் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஒருவர்பிடிபட்டார். அவர், தேவிபட்டினத்தைச் சேர்ந்த லிங்கராஜா (51) என்பதும், மாம்பழத்தில் வெடி வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. லிங்கராஜாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.