Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கோயிலின் கருவறை மேற்கூரையில் எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர்.

இதனால், மண்டைக்காடு கோயில் கருவறையில் அம்மன் சிலை மற்றும் பிற சிலைகள் சேதமின்றி காக்கப்பட்டன. கோயிலின் பிற பகுதிகளிலும் தீவிபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் துரித பணிக்கு பக்தர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆய்வு மேற்கொள்ள வந்த தீயணைப்புத்துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார், இப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உடனி ருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x