

நாகர்கோவில்: களியக்காவிளை அருகே உள்ள பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் குடும்பத்தினருக்கு, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் கரோனா நிவாரணமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இப்பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 75 மாணவர்கள் மற்றும் பளுகல் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 25 பேரின் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் தாமோதரன்பிள்ளை வழங்கினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதுசூதனன், உறுப்பினர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.