முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா - ராமநாதபுரத்தில் திமுகவினர் நலத்திட்ட உதவி :

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா  -  ராமநாதபுரத்தில் திமுகவினர் நலத்திட்ட உதவி :
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வன அலுவலர் அருண்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

ராமநாதபுரம் நகர் திமுக சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசனி உள்ளிட்டவற்றை எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார். மேலும் டீன் (பொறுப்பு) மலர்வண்ணனிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

பரமக்குடி எம்எல்ஏ அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பரமக்குடி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள் உட்பட 800 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in