Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் ரூ.3.24 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் :

கள்ளக்குறிச்சி

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது,'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் "உங்கள் தொகுதி யில் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட15,880 மனுக்களில் முதற்கட்டமாக வருவாய்த் துறையின் கீழ் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், வாரிசு சான்று மற்றும் நத்தம் சிட்டா நகல் உட்பட 149 இனங்களுக்கு ரூ.16,46,240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தலா ரூ.2,10,000 மதிப்பிலான பசுமை வீடு 15 பயனாளிகளுக்கு, ரூ. 31,50,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட உள்ளன.

சிறு பாலம் அமைத்தல், சிமெண்ட் கான்கீரிட் சாலை அமைத்தல், சிமென்ட் கால்வாய் அமைத்தல், சமூதாய கிணறு வெட்டுதல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்தல் மற்றும் உயர்மின் கோபுரம் அமைத்தல், அங்கன்வாடி அமைத்தல் ஆகிய42 பணிகளுக்கு ரூ.2,73,68,000 மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகள் விரைவில்மக்கள் பயன்பாட்டில் கொண்டுவரப்படும்.

மேலும், சமூக நலத்துறையின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1,23,720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசனம் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஒரு நபருக்கு ரூ.97,719 மதிப்பிலான நலத்திட்ட உதவியும், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் மூலம் 5 நபருக்கு ரூ.22,500 மதிப்பிலான இலவச சலவைப்பெட்டியும் வழங்கப்பட உள்ளன. "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தில் ஆக மொத்தம் 214 பயனாளிகளுக்கு ரூ.3,24,08,179 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x