முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா :
ராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை திமுக மாவட்டச் செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி இல்லத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் விஸ்வாஸ் தலைவர் கமலா காந்தி மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் இனிப்புகளை வழங்கினர். இதில், ஜிகே குழுமம் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, ஷீலா வினோத் காந்தி, தொழிலதிபர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நகர பொறுப்பாளர் பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
கருணாநிதியின் உருவப் படத்துக்கு தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவர் 98 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
திமுக நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்சி கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கினார். அதன் பிறகு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார். திருப்பத்தூர் வனக் கோட்ட அலுவலக வளாகத்தில் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந் திரன் முன்னிலையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ நல்ல தம்பி மரக்கன்று களை நட்டு கருணாநிதியின் உருவப்படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
