Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

முழு ஊரடங்கால் கரோனா தொற்று பரவல் குறைந்தும் - திண்டுக்கல் மாவட்டத்தில் குறையாத உயிரிழப்புகள் :

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று குறைந்தபோதும், உயிரி ழப்புகள் குறையவில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்ப டுத்தி வருகிறது. தொடக்கத்தில் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக பாதிப்பு உயர்ந்து 300-க்கும் மேல், 400-க்கும் மேல் என தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மே 23-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 542 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகள் தினமும் ஏற்படத் தொடங்கியது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச் சைக்காக படுக்கை வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் கரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங் கியது. மே 23-ம் தேதி கரோனா தொற்று 542 ஆக இருந்த நிலையில், படிப்படியாகக் குறைந்து மே 30-ல் 334 பேர், மே 31-ல் 323 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஜூன் 1-ல் மேலும் குறைந்து 297 மட்டுமே கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகினர்.

கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையிலும் உயிரிழப்புகள் குறையவில்லை. மே 30-ம் தேதி 7 பேர், மே 31-ல் 5 பேர், ஜூன் 1-ல் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர்.

தற்போது திண்டுக்கல் மாவட் டத்தில் 3336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகள் திறப்பால் கடை முன்பு ஏராளமான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிகின்றனர்.

இவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்த வேண் டும்.

இதுபோன்ற சிறு சிறு நிகழ்வு களில் கவனம் செலுத்தினால் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x