கிராமங்களில் கரோனா பரவலை தடுக்க - வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கிராமங்களில் கரோனா பரவலை தடுக்க வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள உத்த ரவிடப்பட்டுள்ளது என மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை யில், அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் சீரான நிலையில் உள்ளனர். மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதல் தளம் கட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு மீதான பாஜக வினரின் விமர்சனங்களுக்கு எங்கள் செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்போம். கிராமங் களில் கரோனா பரவலை தடுக்க வீடுதோறும் காய்ச்சல் பரி சோதனை மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு மணப்பாறை வெஸ்ட் ரோட்டரி சங்கம் சார் பில் ரூ.5.5 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை மருத்துவமனை நிர்வாகத்திடம் அமைச்சர் நேரு வழங்கினார்.

ஆய்வின்போது, எம்எல்ஏ பி.அப்துல் சமது, முதன்மை மருத்துவ அலுவலர் முத்து கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், கரோனா தடுப்பு உதவி மையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்து, கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், கல்லூரி செயலர்- தாளாளர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது, உதவிச் செயலாளர் கே.அப்துஸ் சமது, கவுரவ இயக்குநர் கே.என்.அப்துல் காதர் நிகால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்

பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியது: பெரியமிளகுபாறை, எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்தி ரபுரத்தில் கைவிடப்பட்ட குவாரிகள் மற்றும் கொல்லாங்குளம், புதூர் கோயில் குளம் ஆகியவற்றை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பராமரித்து மழைநீரை சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது மாநக ராட்சி ஆணையர் சு.சிவசுப்பிர மணியன், நகரப் பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in