சிவகிரியில் சித்த மருத்துவ மையம் :

சிவகிரி அருகே சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் சமீரன், தனுஷ் எம்.குமார் எம்பி ஆகியோர் திறந்துவைத்தனர்.
சிவகிரி அருகே சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் சமீரன், தனுஷ் எம்.குமார் எம்பி ஆகியோர் திறந்துவைத்தனர்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

இதனை, ஆட்சியர் சமீரன், தனுஷ் எம்.குமார் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். ஆட்சியர் கூறியதாவது:

சிவகிரி சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையம் 75 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ உள் மருந்துகள், வெளிப்புற சிகிச்சைகளான மூச்சுப் பயிற்சிகள், தியானம், நுரையீரலை பலப்படுத்தும் ஆசனங்கள், வர்ம முறைகள் போன்ற சிகிச்சைகள், மூலிகை சார்ந்த உணவுகள் வழங்கப்படும். மேலும், குணமாகி வீட்டுக்குச் செல்பவர்களுக்கு உடல் வலிமைக்காக தமிழக அரசின் ஆரோக்கிய பெட்டகமான சித்த மருந்துகள் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும்” என்றார்.

எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யோகானந்த், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலா, கோட்டாட்சியர் முருகசெல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in