

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை மாநில அமைச்சர்கள் நேற்று தொடங்கிவைத்தனர்.
2021- 2022-ம் ஆண்டுக்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூ.62.905 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத் தில் அரியாறு வடிநிலக் கோட் டத்தில் 43 பணிகள் 97.70 கிமீ தொலைவுக்கு ரூ.3.85 கோடியி லும், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகள் 65.11 கிமீ தொலைவுக்கு ரூ.1.77 கோடியிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி, திருச்சி மாவட்டத் தில் மொத்தம் 63 பணிகள் 162.81 கி.மீ தொலைவுக்கு ரூ.5.623 கோடியில் மேற்கொள்ளப்பட வுள்ளன.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
லால்குடி வட்டத்துக்குட்பட்ட புள்ளம்பாடி, சிறுகளப்பூர் ஆகிய கிராமங்களில் ஓடைகள் தூர் வாரும் பணியை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டு கிராமத்தில் உள்ள காட்டாற்றில் தூர்வாரும் பணியை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், லால்குடி எம்எல்ஏ அ.சவுந்தரபாண்டியன், நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்லம், அரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பி.சரவணன், உதவிச் செயற்பொறியாளர் கே.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.