

ஈரோட்டில் நேற்று 1784 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 941 பேர் குணமடைந்துள்ள னர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் தற்போது 15 ஆயிரத்து 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 1,295 நபர்களுக்கு நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டி ருந்தவர்களில் 782 நபர்கள் குண மடைந்துள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்து 96 ஆக அதிகரித்துள்ளது.